Friday, 30 May 2014

செவ்வாய் தோஷம்

ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருப்பினும், அனைவருக்கும் பரிச்சயமான தோஷமென்றால் அது செவ்வாய் தோஷமாகத்தான் இருக்க முடியும்.

அதிலும் முக்கியமாக திருமணப் பொருத்தம் பார்க்க ஜோதிடரிடம் செல்லும் பெற்றோர் முதலில் கேட்கும் கேள்வியே ஆண்/பெண் ஜாதகத்தில் தோஷம் ஏதாவது உள்ளதா முக்கியமாக செவ்வாய் தோஷம் உள்ளதா? என்பதாகும்.

ஏன் என்றால் தோஷம் இல்லாத ஜாதகருக்கு தோஷமுள்ள ஜாதகரைத் திருமணம் செய்து வைத்தால் ஆயுளுக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சமேயாகும்.

சரி இனி செவ்வாய் தோஷத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

Tuesday, 27 May 2014

ஜோதிடம் வரலாறு

எந்த ஒரு கலைக்கும் வரலாறு என்பது அடிப்படை ஆணிவேராகும், ஜோதிடவியலின் வரலாற்றை அறிந்து கொள்வதால், பழங்கால மானுடர்களுக்கு இக்கலை எவ்வாறு உதவியிருக்கிறது என்றும், மேலும் ஜோதிட வளர்ச்சிக்காக பாடுபட்ட நம் முன்னோர்களைப்பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.

முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் பலன்கூறும் முறையானது தனி மனிதனுக்காக இல்லாமல், நாடுகளுக்குப் பார்க்கப்பட்டன. அதாவது தாங்கள் வாழும் பகுதியில் விளைச்சல் எவ்வாறு இருக்கும் என்பது போன்று பலன் பார்க்கும் முறை இருந்தது.

Monday, 26 May 2014

அறிமுகம்

ஓம் "சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோபசாந்தயே"  

 நோக்கம்: ஒரு வலைப்பூ மூலமாக ஜோதிட சாத்திரத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த (அ) ஜோதிட ஆய்வின் மூலமாக நான் தெரிந்து கொண்ட விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால் இந்த வலைப்பூவை துவங்கியுள்ளேன்.