Friday 30 May 2014

செவ்வாய் தோஷம்

ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருப்பினும், அனைவருக்கும் பரிச்சயமான தோஷமென்றால் அது செவ்வாய் தோஷமாகத்தான் இருக்க முடியும்.

அதிலும் முக்கியமாக திருமணப் பொருத்தம் பார்க்க ஜோதிடரிடம் செல்லும் பெற்றோர் முதலில் கேட்கும் கேள்வியே ஆண்/பெண் ஜாதகத்தில் தோஷம் ஏதாவது உள்ளதா முக்கியமாக செவ்வாய் தோஷம் உள்ளதா? என்பதாகும்.

ஏன் என்றால் தோஷம் இல்லாத ஜாதகருக்கு தோஷமுள்ள ஜாதகரைத் திருமணம் செய்து வைத்தால் ஆயுளுக்கு பங்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சமேயாகும்.

சரி இனி செவ்வாய் தோஷத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
இலக்னத்திற்கு 2,4,7,8,12ம்  பாவங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு என்பது பொது விதியாகும்.

ஆனால் இதில் சில விதி விலக்குகளையும் கருத்தில் கொள்ள வேண்டும், உதாரணமாக செவ்வாய் தனது ஆட்சி வீடுகளான மேஷம் மற்றும் விருச்சிகத்தில் இருந்தாலும் மற்றும் உச்ச நீச்ச வீடுகளான மகர, கடக ராசிகளில் இருந்தாலும்  செவ்வாய் தோஷத்திற்க்கான பொது விதிகள் பொருந்தாது.

இது மட்டுமன்றி மேலும் பல சிறப்பு விதிகள் உள்ளன அவையெல்லாம் கருத்தில் கொண்டு ஆராய்ந்த பின்னரே செவ்வாய் தோஷத்தைப் பற்றிய இறுதி முடிவிற்கு வரவேண்டும்.

ஆனால் தற்காலத்தில் சிலர், குறிப்பாக சில தரகர்கள் பொது விதியை வைத்துக்கொண்டே தோஷமில்லாத பல ஜாதகங்களையும் தோஷமுள்ளதாகக் கூறி ஒதுக்கி வைப்பதைக் காண்கிறோம்.
அதைத் தவிர்த்து விட்டு, இனிமேலாவது செவ்வாய் தோஷம் என்று யாராவது சொன்னால் அருகில் உள்ள ஒரு நல்ல  ஜோதிடரிடம் சென்று ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, அதன் பின்னரே அது தோஷ ஜாதகமா இல்லையா என்ற முடிவிற்கு வரவேண்டும்.

No comments:

Post a Comment