Wednesday 2 July 2014

குறைந்த மதிப்பெண்ணா?


கோசாரம் என்ற சொல்லுக்கு கோள்களின் அசைதல் என்பது பொருளாகும், கோள்களின் சஞ்சாரத்தினால் ஒரு ராசிக்கு ஏற்படக்கூடிய பலன்களையே கோசாரப் பலன் என்கிறோம்.
ஒருவருடைய வருங்காலப் பலன்களைப் பற்றிக் கூறவேண்டும் என்றால்
ஜாதக பலன் மற்றும் கோசாரப் பலன் ஆகிய இரண்டையும் ஆராய வேண்டும்.
அனால் இந்நாட்களில் ஊடகங்கள் மூலமாக கோசாரப் பலன்களே பிரதானம் என்பதுபோன்ற ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனால் அது உண்மையல்ல,
உதாரணமாக சமீபத்திய குருப் பெயர்ச்சி மற்றும் ராகு கேதுப் பெயர்ச்சிகளால் பாதிப்புக்குள்ளான ராசிகளில் சிம்ம ராசியும் ஒன்று, ஏன் என்றால் குரு 12ம் இடத்திலும், ராகு 2, மற்றும் கேது 8ம் இடத்திலும் கோசார ரீதியாக சஞ்சரிப்பதாகும், அனால் அந்த ராசிக்காரர்களுக்கு ஜாதக ரீதியாக சிறப்பான தசா, புத்தி நடைபெறுமானால், அதனால் கிடைக்க வேண்டிய நற்பலன்களுக்கு தடை ஏற்படுமேயன்றி தீய பலன்கள் ஏற்படாது.

குறிப்பு: இந்தப்பதிவானது குருப்பெயர்ச்சி, மற்றும் ராகு கேதுப் பெயர்ச்சி பலன்கள் புத்தகங்களில் குறைவான மதிப்பெண்கள் அளிக்கப் பெற்று, அதனால் மனக்கவலை அடைந்துள்ள நண்பர்களுக்காக Dedicate செய்யப்படுகிறது:)

No comments:

Post a Comment