Tuesday 8 July 2014

ராகு கேது தோஷம்


செவ்வாய் தோஷம் போல் தற்காலத்தில் ஜோதிடர்களால் மிகைப்படுத்திக் கூறப்படும் ஒரு தோஷமே ராகு கேது தோஷமாகும், பொது விதிகளை விட்டு விடுவோம், ஆய்வு ரீதியாகப் பார்க்கும் பொழுது 

2,5,7,8ம் வீடுகளில் நிற்கும் ராகு கேது தோஷத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது உண்மையே.

ஏன் என்றால் இரண்டாம் பாவகம் குடும்பத்தையும், ஐந்தாம் பாவகம் புத்திரரையும், ஏழாம் பாவகம் கணவன்/மனைவியையும், எட்டாம் பாவகம் ஆண் ஜாதகத்தில் ஆயுளையும், பெண் ஜாதகத்தில் கணவனின் ஆயுளையும் குறிக்கும் என்பதால் இந்த பாவகங்களில் ராகு கேது அமர்வதால் பாவக நற்பலன்கள் பாதிக்கப்படும்.

அனால் அந்தந்த பாவக அதிபதிகள் வலுவுடன் இருந்து, சுபர் பார்வையும் ராகு கேதுக்கள் பெற்றால் தோஷமில்லை எனக்கொள்ளவேண்டும்.
அனால் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தோஷம் என்று சொல்லி திருமணத்திற்கு தடையாக ராகு கேதுக்களுக்கு பதிலாக சில ஜோதிடர்களே இருக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

No comments:

Post a Comment